Home > Author > Rajiv Malhotra

Rajiv Malhotra QUOTES

12 " க்ளூஜ் அமைப்பில் இருக்கும் இந்தத் தெளிவான கிறிஸ்தவச் சார்புதான் ஒரு மார்க்சிய வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரைத் தேர்ந்தெடுத்தமையை அதிசயமான விஷயமாக்குகிறது.51 தாப்பர் ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையைக் கட்டுடைக்கும் ஒருவர் என்பதுடன் அவருடன் அப்பரிசை அதே ஆண்டு (2008) பகிர்ந்துகொண்டவரோ, ரொமிலா தாப்பர் ஹிந்துப் பண்பாட்டுக்குச் செய்ததற்கு நேர் எதிரான விஷயத்தைக் கிறிஸ்தவத்துக்குச் செய்தவர். பீட்டர் எல். ப்ரவுன் கிறிஸ்தவ மடாலயத் துறவு குறித்து ஒரு நேரான சித்திரத்தைக் கட்டமைக்கிறார். ஹிந்து மதத்தில் துறவு எனும் அதே நிகழ்வை தாப்பர், வாழ்க்கையை நிராகரிக்கும் தப்புவித்தல் என்கிறார்.52 "

Rajiv Malhotra , Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines

19 " குற்றச் சமுதாயத்தினர் சட்டம், 1871-ல் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்திய மக்கள் குழுக்கள் பலவற்றின்மீது இனப்படுகொலை வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நியாயப்படுத்தப்பட்டது. அந்த இந்திய மக்கள் குழுக்கள் பிறப்பிலேயே ‘குற்றவாளி வம்சத்தினர்’ எனக் கருதப்பட்டனர். ஆனால் இதற்கான அடிப்படைக் காரணமே, அவர்கள் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தைத் தங்கள் பிராந்தியங்களிலும் வனங்களிலும் எதிர்த்தனர் என்பதுதான். ‘தக்ஸ்’ (Thugs) எனப்படும் மக்கள் குழுவினர் சித்திரம் இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். இந்த மோசமான சித்திரிப்பின் விளைவாக, தக்ஸ் எனும் வார்த்தை ஆங்கில அகராதியில் ‘குற்றம் செய்பவன்’. ‘பண்பாடில்லாதவன்’ என்கிற பொருளுடன் இன்றைக்கும் நிலை பெற்றுவிட்டது. "

Rajiv Malhotra , Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines