Home > Work > குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye

குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye QUOTES

1 " எண்பதுகளில் உண்மையிலேயே பட்டினி இருந்தது, நானே கண்டிருக்கிறேன். அது தமிழகத்திலும் இருந்தது. இந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் வந்த மாற்றம் என்னவென்றால் உடலுழைப்புக்கான சந்தை மிகமிக விரிவடைந்திருப்பதுதான். எங்கும் உடலுழைப்புக்கான ஆட்களுக்கான தேவை இருப்பதைக் காணலாம். கூலி பலமடங்கு ஏறியிருக்கிறது. மறுபக்கம் தானியத்தின் விலை மிகவும் குறைவாக ஆகியிருக்கிறது. வட இந்தியாவில் கோதுமை மிக மலிவான ஒரு பொருள் இன்று. ஆகவே பட்டினி இல்லை. இன்று பீகாரில்கூட எந்த ஒரு கிராமவாசியிடம் பேசினாலும் நம்மை அவர் சாப்பிட அழைப்பார். இன்றைய வறுமை என்பது வேறு. அடிப்படைத் தங்குமிடம், மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கான தேவைதான் இன்றுள்ளது. அது இல்லாததன் வறுமைதான் இன்று உள்ளது. "

ஜெயமோகன் [Jeyamohan] , குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye

10 " நெடுங்காலம் முன்பு பஞ்சத்தில் வாடிய ஒரு நாடார் சாதிப்பெண் தன் பிள்ளைகளைத் தூக்கி கிணற்றில் போட்டாள் என்று ஒரு கதை உண்டு. அந்தக் கிணறு ஒரு பாதாள வாய். குழந்தைகள் நேராக பாதாளத்திற்குச் சென்று விழுந்தன. கடைசியாக அவள் குதிக்கவிருக்கையில், பிள்ளைகளுடன் பாதாள நாகராசன் வெளியே வந்தான். என்ன என்று கேட்டான். பஞ்சத்தின் துயரத்தை அந்தப்பெண் எடுத்துச் சொன்னாள். அவன் இரண்டு பாதாள மூர்த்திகளை மண்ணுக்கு மேலே அனுப்பினான். அவர்கள் மண்ணில் பெருகினார்கள். அவர்களால் நாடார் சாதி பஞ்சத்தில் இருந்து கரையேறியது. எருமையும் பனையும். "

ஜெயமோகன் [Jeyamohan] , குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye

11 " ஆனால் மண்ணில் எல்லா நிழல்களிலும் பாதாளம் உள்ளது. நெடுங்காலம் முன்பு பஞ்சத்தில் வாடிய ஒரு நாடார் சாதிப்பெண் தன் பிள்ளைகளைத் தூக்கி கிணற்றில் போட்டாள் என்று ஒரு கதை உண்டு. அந்தக் கிணறு ஒரு பாதாள வாய். குழந்தைகள் நேராக பாதாளத்திற்குச் சென்று விழுந்தன. கடைசியாக அவள் குதிக்கவிருக்கையில், பிள்ளைகளுடன் பாதாள நாகராசன் வெளியே வந்தான். என்ன என்று கேட்டான். பஞ்சத்தின் துயரத்தை அந்தப்பெண் எடுத்துச் சொன்னாள். அவன் இரண்டு பாதாள மூர்த்திகளை மண்ணுக்கு மேலே அனுப்பினான். அவர்கள் மண்ணில் பெருகினார்கள். அவர்களால் நாடார் சாதி பஞ்சத்தில் இருந்து கரையேறியது. எருமையும் பனையும். திரும்பிப் பார்த்தபோது இருட்டை ஒரு அருளாக, அணைப்பாக உணர முடிந்தது. "

ஜெயமோகன் [Jeyamohan] , குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye

12 " இந்து மதத்தின் அடித்தளம் பழங்குடிப்பண்பாடு என்பதே. இன்று இந்துக்களாக இருக்கும் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் தெய்வங்களுடன் வந்து சேர்ந்துகொண்ட பழங்குடிகளே. மிகச்சமீபகாலமாக கிறித்தவ மதமாற்ற உத்தியின் ஒரு பகுதியாக, அவர்களிடம் நிதிபெறும் ஆய்வாளர்களால் பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றும் அவர்களின் பண்பாடு இந்துப்பண்பாட்டுக்கு நேர் எதிரானது, இந்துக்களால் ஒடுக்கப்பட்டது என்றும் சொல்லும் ஒரு தரப்பு உச்சகட்டப் பிரசாரம் வழியாகப் பரப்பப்படுகிறது. கல்வித்துறைகளில் பணபலத்தால் நிறுவப்பட்டும் வருகிறது. "

ஜெயமோகன் [Jeyamohan] , குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye