Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" நெடுங்காலம் முன்பு பஞ்சத்தில் வாடிய ஒரு நாடார் சாதிப்பெண் தன் பிள்ளைகளைத் தூக்கி கிணற்றில் போட்டாள் என்று ஒரு கதை உண்டு. அந்தக் கிணறு ஒரு பாதாள வாய். குழந்தைகள் நேராக பாதாளத்திற்குச் சென்று விழுந்தன. கடைசியாக அவள் குதிக்கவிருக்கையில், பிள்ளைகளுடன் பாதாள நாகராசன் வெளியே வந்தான். என்ன என்று கேட்டான். பஞ்சத்தின் துயரத்தை அந்தப்பெண் எடுத்துச் சொன்னாள். அவன் இரண்டு பாதாள மூர்த்திகளை மண்ணுக்கு மேலே அனுப்பினான். அவர்கள் மண்ணில் பெருகினார்கள். அவர்களால் நாடார் சாதி பஞ்சத்தில் இருந்து கரையேறியது. எருமையும் பனையும். "

ஜெயமோகன் [Jeyamohan] , குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : நெடுங்காலம் முன்பு பஞ்சத்தில் வாடிய ஒரு நாடார் சாதிப்பெண் தன் பிள்ளைகளைத் தூக்கி கிணற்றில் போட்டாள் என்று ஒரு கதை உண்டு. அந்தக் கிணறு ஒரு பாதாள வாய். குழந்தைகள் நேராக பாதாளத்திற்குச் சென்று விழுந்தன. கடைசியாக அவள் குதிக்கவிருக்கையில், பிள்ளைகளுடன் பாதாள நாகராசன் வெளியே வந்தான். என்ன என்று கேட்டான். பஞ்சத்தின் துயரத்தை அந்தப்பெண் எடுத்துச் சொன்னாள். அவன் இரண்டு பாதாள மூர்த்திகளை மண்ணுக்கு மேலே அனுப்பினான். அவர்கள் மண்ணில் பெருகினார்கள். அவர்களால் நாடார் சாதி பஞ்சத்தில் இருந்து கரையேறியது. எருமையும் பனையும்.