Home > Work > நாரத ராமாயணம்
1 " சுமந்திரபாலனும், கிரந்தத்தை மேலாகப் பார்த்து, அது பகைவர் வந்தவுடன் நடத்தவேண்டிய யுக்திகளாக இருந்ததால், இப்பொழுது அதைப்பற்றிக் கவலை இல்லை என்று அரசாங்கப் புத்தகசாலையில் வைத்துப் பூட்டினான். "
― புதுமைப்பித்தன் , நாரத ராமாயணம்
2 " சில கெட்டிக்கார அயோத்தி வாசிகள் தங்களிடம் இருந்த படைக்கலங்களின் இரும்பு வீணாவதைக்கண்டு, தோசைக் கற்களாகவும் இரும்புக் கரண்டிகளாகவும் உருக்கி வார்த்துக்கொண்டனர். "
3 " ஒருநாள் பூராவாகவும், வெள்ளியம்பலத் தம்பிரான்களுடனும் அவர்கள் அரசாங்கத்துடனும் ‘டு’ போட்டுவிட்டால் வழிக்கு வந்துவிடுவார்கள் என்று நினைத்து, மூலைக்கு மூலை போய்ப் பேசி ஜனங்களைத் தன்வசப்படுத்த ஆரம்பித்தான். "
4 " மேலும், சீதாபிராட்டியின் மீது ஒரு தனிக் கோபம் இருந்தது. அசோகவனத்திலிருக்கும் பொழுது, என்ன சொல்கிறோம் என்றுகூட கவனிக்காமல் அவள் அவசரப்பட்டுக் கொடுத்த வரத்தினால், தனக்குச் செத்துப் போகவும் வழி இல்லாமல் செய்துவிட்டதை, அவரால் மன்னிக்க முடியவே இல்லை. "