Home > Work > Dhammapadham-9

Dhammapadham-9 QUOTES

1 " இஸ்ரேலில் கடுங்கோடைக் காலத்தில் மூன்றுபேர் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவன் யூதப்பாதிரி. இன்னொருவன் கிரேக்கன். இன்னுமொருவன் பாலஸ்தீனியன். பஸ் கிளம்பியது. ஓர் ஈ கிரேக்கன் தோளில் உட்கார்ந்தது. அதை அப்படியே அறைந்தான். அது தப்பிப் போய் பாதிரியின் தோளில் உட்கார்ந்தது. அவனும் அப்படியே செய்தான். ஈ பாலஸ்தீனியன் தோளில் உட்கார்ந்தது. அவன் உடனே அதைப் பிடித்துத் தின்று விட்டான். இரண்டாவது ஈ வந்தது. முதலில் நடந்தது மீண்டும் நடந்தது. பாலஸ்தீனியன் தின்றுமுடிக்கும் வரை. அப்போது கிரேக்கனும் யூதனும் பாலஸ்தீனியனை வியப்போடு பார்த்தார்கள். நீ எதிர்பார்த்தது சரிதான். மூன்றாவது ஈயும் வந்தது. கிரேக்கன் அடித்துத் துரத்தினான். இப்போது யூதன் அதைப் பிடித்தான். பாலஸ்தீனியனிடம் போனான். "அருமையான ஈ ஒன்று விலைக்கு வந்திருக்கிறது. வாங்கிக்கிறியா?" என்றுகேட்டான். பாதிரியோ இல்லையோ, யூதன் யூதன்தான். வியாபாரத்துக்குச் சந்தர்ப்பம் என்றால் விடமாட்டான். "

Osho , Dhammapadham-9