Home > Work > பெண் ஏன் அடிமையானாள்?

பெண் ஏன் அடிமையானாள்? QUOTES

4 " பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கின்ற முடிவு நமக்கு, கல்லுப்போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதமென்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப் பிராணிகள் முதலியவைகள் இயற்கை வாழ்வு நடத்தும் போது மனிதர்கள் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றார்கள். அப்படியிருக்க இந்த விஷயத்திலும் நன்மையை உத்தேசித்து இயற்கைக்கு விரோதமாய் நடந்து கொள்வதால் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால், ‘உலகம் விருத்தியாகாது, மானிட வர்க்கம் விருத்தியாகாது’ என்று கர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடும்? அல்லது இந்தத் ‘தர்ம நியாயம்’ (அதாவது மக்கள் பெருக்கமடையாவிட்டால்) பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை. "

Periyār , பெண் ஏன் அடிமையானாள்?

10 " உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காக வேயாகும். ஆனால், காதலென்றாலென்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய்விடுவதற்குக் காரணமென்ன? என்பதைப்போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை (காதலை)ப் பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும். "

Periyār , பெண் ஏன் அடிமையானாள்?