Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" சிருஷ்டி கீதம் அப்போது அசத் இருக்கவில்லை சத்தும் இருக்கவில்லை உலகம் இருக்கவில்லை அதற்கப்பால் வானமும் இருக்கவில்லை ஒளிந்து கிடந்தது என்ன? எங்கே? யாருடைய ஆட்சியில்? அடியற்ற ஆழமுடையதும் மகத்தானதுமான நீர் வெளியோ? மரணமிருந்ததோ மரணமற்ற நிரந்தரமோ? அப்போது இரவு பகல்கள் இல்லை ஒன்றேயான அது தன் அகச் சக்தியினால் மூச்சு விட்டது அதுவன்றி ஏதுமிருக்கவில்லை இருட்டால் போர்த்தப்பட்ட வெளி வேறுபடுத்தலின்மையால் ஏதுமின்மையாக ஆகிய வெளி அது நீராக இருந்தது அதன் பிறப்பு வெறுமையால் மூடப்பட்டிருந்தது! தன் முடிவற்ற தவத்தால் அது சத்தாக ஆகியது அந்த ஒருமையில் முதலில் இச்சை பிறந்தது பின்னர் பீஜம் பிறந்தது அவ்வாறாக அசத் உருவாயிற்று! ரிஷிகள் தங்கள் இதயங்களைச் சோதித்து அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர் அதன் கதிர்கள் இருளில் பரந்தன ஆனால் ஒருமையான அது மேலே உள்ளதா? அல்லது கீழே உள்ளதா? அங்கு படைப்பு சக்தி உண்டா? அதன் மகிமைகள் என்ன? அது முன்னால் உள்ளதா? அல்லது பின்னால் உள்ளதா? திட்டவட்டமாக யாரறிவார்? அதன் மூல காரணம் என்ன? தேவர்களோ சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்! அப்படியானால் அது எப்படிப் பிறந்தது? யாருக்குத் தெரியும் அது? அதை யார் உண்டு பண்ணினார்கள் அல்லது உண்டு பண்ணவில்லை? ஆகாய வடிவான அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது! "

ஜெயமோகன் [Jeyamohan] , India Gnanam: Thedalgal, Purithalgal


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : சிருஷ்டி கீதம் அப்போது அசத் இருக்கவில்லை சத்தும் இருக்கவில்லை உலகம் இருக்கவில்லை அதற்கப்பால் வானமும் இருக்கவில்லை ஒளிந்து கிடந்தது என்ன? எங்கே? யாருடைய ஆட்சியில்? அடியற்ற ஆழமுடையதும் மகத்தானதுமான நீர் வெளியோ? மரணமிருந்ததோ மரணமற்ற நிரந்தரமோ? அப்போது இரவு பகல்கள் இல்லை ஒன்றேயான அது தன் அகச் சக்தியினால் மூச்சு விட்டது அதுவன்றி ஏதுமிருக்கவில்லை இருட்டால் போர்த்தப்பட்ட வெளி வேறுபடுத்தலின்மையால் ஏதுமின்மையாக ஆகிய வெளி அது நீராக இருந்தது அதன் பிறப்பு வெறுமையால் மூடப்பட்டிருந்தது! தன் முடிவற்ற தவத்தால் அது சத்தாக ஆகியது அந்த ஒருமையில் முதலில் இச்சை பிறந்தது பின்னர் பீஜம் பிறந்தது அவ்வாறாக அசத் உருவாயிற்று! ரிஷிகள் தங்கள் இதயங்களைச் சோதித்து அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர் அதன் கதிர்கள் இருளில் பரந்தன ஆனால் ஒருமையான அது மேலே உள்ளதா? அல்லது கீழே உள்ளதா? அங்கு படைப்பு சக்தி உண்டா? அதன் மகிமைகள் என்ன? அது முன்னால் உள்ளதா? அல்லது பின்னால் உள்ளதா? திட்டவட்டமாக யாரறிவார்? அதன் மூல காரணம் என்ன? தேவர்களோ சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்! அப்படியானால் அது எப்படிப் பிறந்தது? யாருக்குத் தெரியும் அது? அதை யார் உண்டு பண்ணினார்கள் அல்லது உண்டு பண்ணவில்லை? ஆகாய வடிவான அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது!