Home > Author > Aadhavan

Aadhavan QUOTES

1 " பத்மினியும் மனதாழத்தில், அவர்களிடையேயுள்ள பந்தத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம்தான் அளித்திருக் கிறாளோ, ஒரு வேளை? அப்படியென்றால் தாய்மை அவளைக் கவர்ச்சி குறைந்தவளாக, பாதுகாப்பற்றவளாக உணரச் செய்யலாம். அதே சமயத்தில் அவனைத் தந்தையாக்கியதால் அவனுடைய சகோ சாந்தியடைந்து, அவன் அவள் மீது நன்றி பாராட்டுவானென்று அவர் எதிர்பார்க்கலாம். சமூக ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை நிரந்தரமாகச் சிறைப்படுத்திவிட்டதாகத் திருப்தியடையவும் கூடும். ஏன், அவனும் தான் குழந்தை பிறந்த பிறகு அவள் மீது அவனுடைய ஆதிக்கம் உறுதிப்பட்டுவிட்டதாகவும் சமூக நியாயங்களின்படி அவளுக்கு அவனுடைய ஆதரவு இன்றியமையாததாகிவிட்டதென்றும் சுயநலமான ஆசுவாசம் பெறக்கூடும். சே, காதல் கடைசியில் இவ்வளவுதானா? பயன்படுத்திக்கொள்ளல்தான் உண்மையா? "

Aadhavan , காகித மலர்கள் [Kakitha Malargal]

2 " கலைஞனின் ஹிப்போக்ரசியைப் பற்றி பேசுகிறவர்கள், தாங்களும் ஹிப்போக்ரசி இல்லாதவர்கள்தானா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் புரட்சிகரமாக எதையும் சாதித்திராதவர்களும்,சந்தித்திராதவர்களும்தான் கலைப்படைப்புகளில் காரசாரமாக, புரட்சிகரமான அம்சங்களை நாடுகிறார்கள். அப்போதுதானே இவற்றை ஆரவாரமாகப் புகழ்வதன்மூலம் தனக்கென ஒரு புரட்சிகரமான பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள முடியும், அதற்காக. இவர்களுடைய அனுபவங்களின் வறுமையையே இது காட்டுகிறது.. இதுவும் ஒருவகை எஸ்கேப்பிசம் தான். இவர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். "

Aadhavan , என் பெயர் ராமசேஷன் (En Peyar Ramaseshan)

5 " உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச்சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனச்சாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்கள். உங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், செயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது; அமைப்பே தவறானதென்று சுட்டிக்காட்டுவதன் மூலம் அமைப்பின் ஒரு சிறு மூலையில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஷன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல் திறனோ அற்ற மலட்டுத்தனம்தான் நம் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது. "

Aadhavan , காகித மலர்கள் [Kakitha Malargal]